தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 670 லீற்றர் விவசாய கிருமி நாசினியை தமிழக பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் வடபகுதிக்கு கடத்தும் நோக்கில் ஓர் படகில் ஏற்றிய சமயமே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் கிருமிநாசினியில் 670 போத்தல்கள் ஏற்றிய சமயமே இன்று அதிகாலை கிருமி நாசினிகள்கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கிருமி நாசினியை தூத்துக்குடி மறாயன் பொலிசார் மேலதிக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துகின்றனர்.







