
கொழும்பு, மார்ச் 30
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் ரூ.450 நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக் கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் சில தவறான முடிவுகளால் நிதி ஒழுக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அரசாங்க வருவாயும் 25% குறைக்கப் பட்டது. இதை முதலில் பார்த்தபோது செலவு பக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னோம்.
எனினும் அரசாங்கம் அரசியல் பிரசாரத்துடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. வருமானத்துக்குப் பதிலாக செலவுகள் அதிகரித்த போது கடன் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது கடன் தராத நிலை ஏற்பட்டுள்ளது. இலகுவாக அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதைத் தொடர்ந்தது.





