தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதமடையும்: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

கொழும்பு, மார்ச் 30

டீசல் தட்டுப்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் பற்றாக்குறையால் பஸ் தொழில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் சங்கங்கள் தவிர, பாடசாலை வேன், கொள்கலன் லொறிகள் என அனைத்து போக்குவரத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கும் முறையை இலங்கை போக்குவரத்து சபை உருவாக்கியுள்ள போதிலும் தற்போது தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போ வழங்குவதில்லை என அவர் கூறினார்.

Leave a Reply