எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும் வல்லமை கொண்ட அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக  தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின் JDAM  எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகைக் குண்டுகள் 80 கிலோமீற்றர் மற்றும் அதற்கு அப்பல் உள்ள எதிரிகளின் பதுங்குக் குழிகள், விமான ஓடு பாதைகளை தகர்க்கவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் மோசமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகைக் குண்டுகளை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply