பட்டா-மோட்டார் சைக்கிள் விபத்து: யாழ். ஆவரங்காலில் சம்பவம்

யாழ்ப்பாணம், மார்ச் 30

யாழ்ப்பாணம்-ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற நபரை பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சேர்ந்து பாலத்தினுள் சென்றது.

இந்த சம்பவத்தில் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமடைந்துள்ளன. இதில் மோட்டார் சைக்கிளுடன் நின்றவர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

பட்டா ரக வாகன சாரதியின் கவனக்குறைவால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply