பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைது

யாழ்ப்பாணம், மார்ச் 30

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. 

நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் செவ்வாய்க்கிழமை யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். 
அதன் போது அங்கு நின்றவர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , பொலிஸார் மீது தாக்குதலையும் மேற்கொண்டு இருந்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார், பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளனர். 

ReplyForward

Leave a Reply