வடமாகாண கல்வித் திணைக்களத்தில் குவிந்த எரிவாயு சிலிண்டர்கள் – கோபத்தில் மக்கள்

மக்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக வெயிலில் நீண்ட வரிசையில் நிற்கும் இந்த நேரத்தில், அரச அலுவலர்களுக்கு அவர்களின் அலுவலகத்துக்கு கொண்டு சென்று வாயு சிலிண்டர் விநியோகிக்கும் முறை எப்போது கொண்டு வரப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இது தவிர பிரதேச செயலகங்கள் ஊடாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 10 சிலிண்டர் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று கொண்டுவரபட்டுள்ளன. குறித்த வாயு சிலிண்டர்கள் யாருக்கு என்ன அடிப்படையில் வழங்கப்படவுள்ளது போன்ற விபரங்கள் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஆனாலும் குறித்த சிலிண்டர்களில் யாருக்கு எரிவாயு வழங்கப்படவுள்ளது என்ற பெயர் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு மக்கள் விரைந்துள்ளனர்.

Leave a Reply