3 வாரங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே இருப்பில்!

அரச மருத்துவமனைகளில் இன்னும் 3 வாரங்களுக்கு 40 வகையான மருந்துகளின் இருப்பு போதுமானதாக இருக்கும் என அரச மருந்துப் பொருட்கள் விநியோக மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தையும் விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரச மருத்துவமனைகளில் தற்போது இரண்டு வகையான மருந்துகள் கிடைப்பதில்லை.
இறக்குமதியை எளிதாக்கும் வகையில் கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளதா என வினவிய போது,

ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும் ஒரு விசேட வைத்தியர் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply