
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தட்டுப்பாடு நிலவிய மருந்து பொருட்கள் தற்போது கிடைக்க பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்த வைத்தியசாலையில் தற்போது சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் வழமைப்போல இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒளடத தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சகல ஆய்வக சேவைகளும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.





