மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த கணவண்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட் சவுக்கடை பிரதேசத்தில், பெண்ணொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தர்.

சவுக்கடை பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

குறித்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப பிரச்சினையே இந்த படுகொலைக்கு காரணம் என்று தெரிவந்துள்ளது.

சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply