கோவளம் கடற்பரப்பில் கஞ்சாவுடன் மூவர் கைது!

கோவளம் கடற்பரப்பில் இன்று காலை, மூன்று சந்தேக நபர்கள் 66.66 கிலோ கிராம் எடையுடைய கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கஞ்சாவினை கடத்த முற்பட்டவேளை அவர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply