CIDயிடம் ஒப்படைக்கப்பட்ட மிரிஹான சம்பவம் தொடர்பான விசாரணைகள்

கொழும்பு, ஏப் 01

நுகேகொடை, மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள வீதியில் நேற்றையதினம் இரவு பொதுமக்கள் கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்பில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply