
கொழும்பு, ஏப் 1
நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16, 479 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637,256 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 7, 896 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





