துப்பாக்கிகளை மக்களுக்கு நீட்டாமல் நாட்டை வீணடித்தவர்களுக்கு முன் நீட்டுங்கள்! தேரர் எச்சரிக்கை

மூன்றாம் திகதி வீதிக்கு இறங்கவுள்ள மக்களுக்கு, தங்களுடைய துப்பாக்கிகளை மக்கள் முன் நீட்டாமல் இந் நாட்டை வீணடித்தவர்கள் முன் நீட்டுங்கள் என தேரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ குடும்பத்தினர்கள் அனைவரும் நாட்டில் உள்ள சொத்துகளை விற்று மக்களை ஏமாற்றி நாட்டை முற்றாக சீரழித்துள்ளனர்.

தற்போது முழு நாடும் குழப்பத்திற்குள்ளாகி உள்ளது.

மக்களை பாதுகாக்கவே காவல்துறையினர் உள்ளனர். இவ்வாறான தேச துரோகிகளை பாதுகாப்பதற்கு அல்ல.

எதிர்வரும் மூன்றாம் திகதி மக்கள் வீதிக்கு இறங்கி போராட உள்ளனர்.

அன்றைய தினம் தங்களுடைய துப்பாக்கிகளை மக்கள் முன் நீட்டாமல் இந்த நாட்டை வீணடித்தவர்கள் முன் நீட்டுங்கள்.

இந் நாட்டை சீரழித்தவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டுமே.

அமைச்சர்களின் கணக்கில் மட்டும் டொலர்கள் கோடி கணக்கில் உள்ளது.

மக்களிற்கு இன்று உணவு இல்லை, வாழ வழி இன்றி நாட்டை விட்டு ஓடுகின்றனர்.

எனவே, நாட்டில் உள்ள முப்படையினரில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளிற்கும் சாதாரண பதவியில் உள்ள அதிகாரிகளிற்கும், நாட்டிற்காக செயல்படுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்- என்றார்.

Leave a Reply