மிரிஹானை ஆர்ப்பாட்டத்தை அடிப்படைவாதமாகவோ தீவிரவாதமாகவோ கருதக்கூடாது!ரணில்

மிரிஹானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடிப்படைவாதமாகவோ தீவிரவாதமாகவோ கருதக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கூறுவதன் மூலம் இந்த நிலைமை மேலும் மோசமடையும். இது விரக்தி அடைந்த மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும். அரசாங்கம் இதனை உணர வேண்டும்.

அடுத்தவாரம் நாடாளுமன்றை கூட்டி, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply