பேருவளை பகுதியில் தீப்பந்த போராட்டம்

பேருவளை பகுதியிலும் தற்போது தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும் பொதுமக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பேருவளை நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டம் காரணமாக வீதிப் போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply