மிரிஹானை போராட்டம்: 15 பேர் பிணையில் விடுவிப்பு

கொழும்பு, ஏப் 1

மிரிஹானை பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற அமைதியின்மை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணை கங்கொடவில நீதிமன்றில் நீண்ட நேரமாக முன்னெடுக்கபட்டிருந்தது.

இந்த நிலையில், 400 சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியிருந்ததுடன், இலங்கையில் இதுவே பிரதிவாதிகள் சார்பில் அதிகூடிய சட்டத்தரணிகள் முன்னிலையான முதலாவது சந்தர்ப்பமாகும் எனத் தெரியவருகின்றது.

இதன்போது, நீதிமன்றில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட 21 பேரில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 6 பேர் பொலிஸாரினால் அடையாள அணிவகுப்பு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக 6 பேர் எதிர்வரும் 4 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

Leave a Reply