
அனுராதபுரம், ஏப் 02
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என சிங்கள ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் பாரிய ஆர்ப் பாட்டம் கலவரமாக மாறிய போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் பதற்றத்தின்போது ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதியை அழைத்த ஞானக்கா, உடனடியாக தற்போது உள்ள பாதுகாப்பை விடவும் அதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
காளி அம்மனின் சக்தி உள்ளதாகக் கூறி மக்களை ஏமாற்றும் ஞானக்காகவுக்கு ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி பாதுபாப்பை அதிகரிக்க இணக்கம் வெளியிட்டுள்ளனர் என்று குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் ஞானக் காவின் கோயில் மற்றும் அவரது புதிய ஹோட்டலையும் சுற்றிவளைப்பதற்கு மக்கள் தயாராகி வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.





