இன்றிரவு விசேட அமைச்சரவை கூட்டம்!

இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply