கோட்டா அரசின் பலமான ஆதரவாளர் குடும்பம் வெளிநாட்டிற்கு பறந்தது!

தற்போதைய அரசாங்கத்தின் பலமான ஆதரவாளரான நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனைவியும் மகனும் இன்று (04) மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய தகவல்களின் படி, இருவரும் விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையம் வழியாக நாட்டை விட்டு வெளியேறி, UL 101 விமானத்தில் மாலைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிஸ்ஸங்க சேனாதிபதியும் விமானம் UL 101 இல் நாட்டை விட்டு வெளியேறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply