மக்கள் சார்பில் நான் சுயாதீனமாக இயங்கவுள்ளேன்! – விலகினார் முஷாரப் எம்.பி

நான் மக்கள் சார்பில் சுயாதீனமாக செயற்படவுள்ளேன் என நாடளுமன்ற உறுப்பினர் முஷாரப் எம்பி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆளும் கட்சியும் சரி இல்லை, எதிர்க் கட்சியும் சரி இல்லை.ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைவில்லை.

நாட்டு மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர். மக்கள் எந்த கட்சியையும் பார்க்கவில்லை.

அன்றாட வாழ்க்கைக்கு பதில் வழங்குமாறு தெரிவித்தே வீதிக்கு வந்துவிட்டனர்.

ஆகவே நான் மக்கள் சார்பில் சுயாதீனமாக செயற்படவுள்ளேன் என்றார்.

Leave a Reply