நாட்டின் நிலைமை தொடர்பில் இரண்டு நாள் விவாதம்!

கொழும்பு, ஏப் 5

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றில் 2 நாட்கள் விவாதமொன்றை நடத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, கட்சித் தலைவர்களின் ஒன்றிணைந்த தீர்மானத்திற்கு அமைய புதன்கிழமை , வியாழக்கிழமைகளில் நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றைய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுரகுமார திசாநாயக, ரிசாட் பதியூதீன், மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply