எரிபொருள் வரிசை; யாழில் ஒருவர் பலி.

யாழ் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த அளைஞர் மீது பஸ்ஸின் சில்லு ஏறியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை என்பதுடன் பேருந்து நடத்துனரும் அதை கவனிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் பேருந்து யாழ் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது. அதேநேரம் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார். அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது ஏறியுள்ளது.

இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்த நிலையில் பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply