இரண்டாவது தடவையாக ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்! – சபாநாயகர் மீண்டும் வெளியேற்றம்

இரண்டாவது நாளாக கூடிய இன்றைய நாடளுமன்ற அமர்வு சிறிது நேரம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ, சபாநாயகரை பார்த்து ஆவேசத்துடன் தாறுமாறான கேள்விகளை தொடுத்த நிலையில், சபாநாயகர் சபையிலிருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்றினார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலும் பால்மா, எரிபொருள் கிடைக்காது என்று தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் “கோ  கோட்டா கோம்” என கோசம் எழுப்பிய எழுப்பியுள்ளனர்.

இதை தொடர்ந்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply