மாணவிகளின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்த இராணுவ உயர் அதிகாரி – பெற்றோர் எடுத்த நடவடிக்கை

கைத்தொலைபேசியை ஹெல்மட்டில் வைத்து, மாணவிகளின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவிகளின் கால்களுக்கு அருகில் ஹெல்மட்டை தொங்கவிட்டு குறித்த நபர் காணொளி பதிவு செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

40 வயதான குறித்த அதிகாரி கொழும்புக்கருகிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர் அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply