லிபியாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கப் போகிறது! – முன்னாள் அமைச்சர் சந்திரசேன

லிபியாவில் இடம்பெற்றதுபோல குண்டர்கள் மற்றும் பயங்கரவாதிகள் குழுவினால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களின் நோக்கம் சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ அதிகாரத்தை வழங்குவதல்ல, மாறாக அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் குற்றம் சாட்டுவதே அவர்களின் இலக்காகும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் லிபியாவுக்கும் ஈராக்கிற்கும் என்ன நடந்ததோ அதுவே இலங்கைக்கு நடக்கப் போகிறதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply