20 க்கு வாக்களித்த எம்.பிமார்கள் கொண்டாட்டம், மக்கள் திண்டாட்டம்! கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் விரக்தி நாடு பூராகவும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வரும் நிலையில் கிண்ணியாவிலும் இன்று (07) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

கிண்ணியா பொது மக்கள் இணைந்து கொண்டு புஹாரி சந்தியில் இருந்து பிரதான வீதி ஊடாக டீ சந்தி வரை பலத்த கோசங்களுடன் சென்றனர்.

இதில் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கிய 7 SLMC ,ACMC எம் பி மார்களும் இன்றைய நாட்டின் நெருக்கடிகளுக்கு பொறுப்பானவர்களே, விவசாயிகளுக்கு பசளை மற்றும் நாசினியை முடக்காதே, 20 க்கு வாக்களித்த எம்.பிமார்கள் கொண்டாட்டம், வாக்களித்த மக்கள் திண்டாட்டம், வேண்டாம் வேண்டாம் விலை வாசி உயர்வை எம்மீது திணிக்க வேண்டாம், பொலிஸ் முப்படையினரின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் நாம் வீதியில் போன்ற வாசகங்களை ஏந்தியும் Go Home Goata என கோசங்களை எழுப்பியும் இதன் போது பேரணியாக சென்றனர்.

இதன் போது ஊடகங்களுக்கும் இவ்வாறு கருத்துரைத்தனர்,

ஜனநாயகமான போராட்டத்தை மதித்து ஜனாதிபதி பதவியை துறக்க வேண்டும் .

மக்களின் நிலை மோசமாகியுள்ளதுடன் வீதிக்கு இறங்கியுள்ளார்கள். தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ், பெற்றோல், டீசல் இல்லை தட்டுப்பாடு நிலவுகிறது இதன் மூலமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

எனவே பிரதமர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் இல்லாது போனால் போராட்டம் தொடரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வீர வசனம் பேசுகின்ற அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ போன்றவர்கள் தைரியமிக்கவர் என்றால் பாராளுமன்ற வீதி ஊடாக வரச் சொல்லுங்கள் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு மேலும் தெரிவித்தனர்.

இதில் பல நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply