திருட்டு சம்பவம்: வயோதிபப் பெண் கொலை

தலவாக்கலை, ஏப் 09

தலவாக்கலை, வடகொட பிரதேசத்தில் வீடொன்றில் 84 வயதுடைய வயோதிப பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வயோதிப பெண் வீட்டில் தனிமையில் இருந்த போது துணியினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த காதணிகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் மற்றும் பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதுடன், தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply