காலி முகத்திடல் முற்றாக முடங்கியது!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள பகுதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

தற்போது அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் பொருத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

Leave a Reply