பரபரப்புக்கு மத்தியில் ஜப்பானிய தூதுவர் – சஜித் பிரேமதாச திடீர் சந்திப்பு.

ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (08) எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் எனவும் அதற்கு தூதுவர் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நிலவிவரும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் தேவைப்பாடு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply