மின்துண்டிப்பு வரும் நாட்களில் குறைவடையும்: ஜனக்க ரத்நாயக்க

கொழும்பு, ஏப் 9

நாட்டில் மின்துண்டிப்பு அதிகம் நிலவுகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் குறைக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் கிடைக்கின்றமை மற்றும் மழையுடனான வானிலை நிலவுகின்றமை காரணமாக, எதிர்காலத்தில் மின்தடை அமுலாகும் நேரத்தைக் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கிடைத்துள்ள 25,000 மெற்றிக் டன் உலை எண்ணெய்யை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த எண்ணெய் முழுமையாக மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply