நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நெலுவ , ஏப் 10

நெலுவ பிரதேசத்தில் அம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 08 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அம்பலேகெதர வீதியின் குறுக்கே நிரம்பி வழியும் இன்கல் ஓடையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது தாயுடன் நான்கு பிள்ளைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply