யாழ்.சித்தங்கேணியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து! காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்குள்ளான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையை சேர்ந்த நாகராசா சிறீஸ்குமார் (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply