அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார்.

அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கண்டி மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவிற்கு “எச்சரிக்கை விடுத்தல்” எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply