பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு! வெளிநாடுகளில் உதவிக் கோரும் நிபுணர்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் அவசர மருத்துவப் பொருட்கள் தேவை என்று இலங்கையின் குழந்தை நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி முக்கியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன், எண்டோட்ராயல் (ET) குழாய்கள் போன்ற உடனடி நன்கொடைகளை அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரியவருகின்றது.

வெளிநாட்டில் உள்ள தமது சகாக்களுக்கு இந்த முக்கியமான செய்தியை அவர்கள் அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் மருத்துவமனை அமைப்பில் பல விடயங்கள் குறைவாக உள்ளன, இதில் குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை காற்றோட்டம் செய்ய எண்டோட்ராயல் குழாய்களின் பற்றாக்குறை குறித்து குழந்தை மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் இருக்கும் கையிருப்பு மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று அரசத் துறையில் சேவையாற்றும் மூத்த குழந்தை மருத்துவ நிபுணர் சமன் குமார கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் இது தொடர்பில் யூடியூப் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்

எனவே பிறந்த குழந்தை பராமரிப்புக்கான பொருட்களை அனுப்ப வெளிநாட்டில் உள்ள தமது நண்பர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பற்றாக்குறை காரணமாக ET குழாய்களை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ள சமன் குமார, நிலைமையை மோசமானது என்று விபரித்துள்ளார்.

Leave a Reply