“கல்முனையில் தமிழர்” எனும் ஆவண நூலை வெளியிட்டார் எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம்!
கல்முனை தொடர்பான முக்கிய ஆவண நூல் ஒன்றை எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம் வெளியிட்டுள்ளார்.
480 பக்கங்களைக் கொண்ட “கல்முனையில் தமிழர்” எனும் இந்த ஆய்வு நூல் முக்கிய ஆவணமாகும்.
கல்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் கடந்த மாதம் இந் நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட்ட நிருவாக அதிகாரி திருமதி P.S.M சாள்ஸ் மற்றும் சிற்ப்பு அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீஷன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரிதேச செயலாளர த. கஜேந்திரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் செ. புவனேந்திரன், மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவன பணிப்பாளர் எஸ். ஜெயபாலன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நூலை யாவரும் வாசித்து ஆவணப்படுத்துவோம்..





