போராட்டங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிக்கும்! – பிரதமர் மக்களுக்கு விசேட உரை

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாட்டிற்கான விசேட உரை சற்று முன்னர் நிகழ்த்தப்பட்டது.

இதற்கமைய, இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பல கட்சிகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள போதிலும் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தமது அரசாங்கம் விரைவில் தீர்வினை முன்வைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு எழுப்பப்படும் கோசங்கள் நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும்.

அத்துடன் விவசாயிகளின் நன்மை கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதோடு, சேதனப்பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

Leave a Reply