நான்காவது நாட்களாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்.(நேரடி றிப்போட்)

காலிமுகத்திடலில் ஆரம்பமான அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

தன்னெழுச்சி ஆர்ப்பாட்டமாக தொடர்கின்ற குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நாளுக்குநாள் ஆதரவு பெருகி வருகின்றது.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த பகுதி கோ கோட்டா கம என்றவாறாக பெயர் இடப்பட்டு தற்போது போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காணமாக குறித்த பகுதிகளில் இடையிடையே வாகன நெரிசல்களும் ஏற்பட்டு வருவதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply