அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை;இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

இலங்கையில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 20 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீட்டித்து ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் இதன்போது உத்தரவிட்டார்.

Leave a Reply