எரிபொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: பொலிஸ்

சாமாந்துறை, ஏப் 12

எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,

சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி, கடந்த வருடங்களைப் போன்று தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது.

இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply