சீன தூதுவர் – நிதியமைச்சருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இரு தரப்பினரும் ஆழமான கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply