ராஜபக்ஷக்கள் இல்லாத அரசாங்கத்தையே மக்கள் விரும்புகின்றனர்: வாசுதேவ

கொழும்பு, ஏப் 13

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷக்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் வாசுதேவ கூறியதாவது,

புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை தாம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply