காலிமுகத்திடல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பார்வையற்றவரும் இணைவு.

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ச்சியாக நிலவும் நிலையிலும் ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது. அத்துடன் ஆர்ப்பாட்டக்கார்களுக்கு வேண்டிய உணவு மற்றும் ஏனைய வசதிகளை பல்வேறு அமைப்புக்களும் தனிநபர்களும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களால் காலிமுகத்திடல் பகுதியில் கோட்டா கோ கம என்ற பெயரில் அரச எதிர்ப்பு கிராமம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன்தற்காலிக கழிப்பறை மற்றும் நூலக வசதிகளை உள்ளடக்கியவாறு காணப்படுகிறது.

இதேவேளை நேற்றையதினம் பார்வையற்ற ஒருவரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவை வழங்கிவருகின்றார்.

Leave a Reply