அரசின் பேச்சுவார்த்தை கோரிக்கையை இளைஞர்கள் நிராகரிக்க கூடாது-மஹிந்தவும் வேண்டுகோள்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது முகப்புத்தகம் வாயிலாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்.

இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுபவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இன்று காலை பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில்பிரதமரின் அழைப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“‘விவாதத்தை அரசு விரும்புவது போராட்டத்தின் வெற்றி. பேச்சுவார்த்தை கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வழி என்பதால் “இளைஞர்கள்” அதை நிராகரிக்க கூடாது.’” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply