விளக்குமாற்றில் ஏறிய மஹிந்தவின் சால்வை!

காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாளுக்கு நாள் பலரும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞன் ஒருவன் விளக்குமாற்றில் மஹிந்த அணிவது போன்ற சால்வையினை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக பல்வேறுவிதமாக தமது எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply