பண்டிகை காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

கொழும்பு, ஏப் 13

புத்தாண்டு காலத்தில் வீட்டில் எரிபொருளை சேமித்து வைக்கும் போது கவனமாக இருக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி சொய்ஸா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் புஷ்பா ரம்யாணி சொய்ஸா கூறுகையில்,

பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாகுவதாகவும், வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, பெற்றோலைப் பயன்படுத்தியமையால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply