அம்பாறையில் எரிபொருள்களை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்!

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில மாதங்களாக எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடான நிலை இன்று வரை தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்கள் இல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர். சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல்,டீசல் பெறுவதற்கும் பொதுமக்கள் மண்ணெண்ணையை பெறுவதற்காக கலன்களுடன் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர்.

இதனால் பிரதான பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம் எரிபொருளை நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே உள்ள வீதி நீளத்திற்கு வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply