மது போதையால் ஏற்பட்ட விபரீதம் – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

ஹொரணை, 13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார்.

மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹிக்கடுவ – வெல்லத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் காலி, ஹல்விடிகல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply