
மிரிஹானவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை சுற்றிவளைத்து அண்மையில் மக்களால் முற்றுகைப்போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞன் ஒருவன் தனி ஒருவராக நின்று எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் குறித்த இளைஞனின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவியது.
இந்நிலையில் குறித்த பகுதியில் நடைபெற்ற சம்பவங்களில் அந்த இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மிரிஹான போராட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அதில்,
நான் பேசி முடித்த பின் எனக்கு பின்னால் வெடி சத்தம் ஒன்று கேட்டது அதாவது ஜனாதிபதியின் வீட்டிற்கு பின்னால் அதை பார்க்க சென்ற போது எங்களுக்கு கண்ணீர் புகை வீசப்பட்டது.
அங்கு 10 பேர் சிறு இடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களிற்கு கண்ணீர் புகை வீசப்பட்டது நான் அதை தடுக்க முயன்ற போது அவர்கள் மீது துப்பாக்கி நீட்டினர் நான் துப்பாக்கியை பிடித்தேன் பின்னர் வெடிப்பு சம்பவம் கேட்டது.
பின்னர் அவ்விடத்தில் உள்ள பேருந்து அருகில் பொலிஸ் சிலர் அழைத்துச்சென்றனர் அவர்கள் நினைத்தது நான் பல்கலைக்கழக மாணவர் என்று பின் என்னை அடித்துக் கொண்டு எரிந்த பேருந்துகில் அழைத்து வந்து அடித்தனர்
அப்போது சிவில் ஆடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளும் இருந்தனர் சிவில் ஆடையில் வேறு சிலரும் அவர்களை பார்க்கும் போது விலை உயர்ந்த கடிகாரம் சப்பாத்துகளை அணிந்திருந்தனர் அரசியல்வாதிகள் போல.
அடிக்கும் போது ஒரு இராணுவத்தினர் என்னை அனைத்துக்கொண்டார் தலையில் அடிக்க வேண்டாம் என்று. என்னை அடித்தது அவ்விடத்தில் இருந்த தண்ணீர் பௌசர் (track) அருகில் வைத்துதான் என்னை அடித்தனர் பின் அப் பௌசரை திறந்த போது 15 பேர் போல அடிப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர்.
அடிப்பட்டவர்கள் சிறுநீர் கழித்து மலம் கழித்து பாரிய துன்பத்துள்ளாக்கப்பட்டிருந்தனர். அடிப்பட்டிருந்தவர்களில் முஸ்லிம் இனத்தவர்களும் இருந்தனர் தமிழ் இனத்தவர்களும் இருந்தனர் யார் யார் என்று தெரியாது ஆனால் அடிப்பட்ட நிலையில் இருந்தனர் என அவர் தெரிவித்தார்.





