
மன்னார் மாவட்டம் கட்டுக்கரைக்கு நீர் வார தேக்கத்தில் நீராடிய ஒருவர் உயிரிழந்துள்ளார்
தென்னிலங்கையில் இருந்து இன்று சுற்றுலா வந்த ஒருவரே இவ்வாறு நீராடியபோது தேக்கத்தில் வீழ்ந்து உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





